எமது மண்முனை மேற்கு பிரதேச சபையானது எமது சபையின் ஆளுகைக்கு உட்பட’ட பிரதேசங்களில் சபையின் அமரர் ஊர்தி சேவையினை 2025- ஜனவரி தொடக்கம் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிடத்தித்தினூடாக இலவச சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா திட’டத்தினுடாக வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற எம் மக்களுக்கு மேலும் ஒரு சலுகையை வழங்கும் நோக்கில் இவ் இலவச அமரர் ஊர்தி சேவையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . எமது பிரதேசத்திற்குள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு சபையின் இலவச அமரர் ஊர்தி வாகனத்தின் சேவை தேவைப்படின் பொருத்தமான கிராம சேவகர் அவர்களின் உறுதிப்படுத்தலுடன் (வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பம் என்பது உறுதிப்படுத்தபடுதல் வேண்டும் ) மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு சமூகம் கொடுத்து இச் சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.