இன்றைய தினம் (20.01.2024) எமது மண்முனை மேற்கு பிரதேச சபையில் “கிளீன் ஸ்ரீலங்கா “வேலைத்திட்டமானது நடைமுறை படுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு எமது அலுவலகத்தில் பணிபுரியும் செயலாளர்,உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள்,நூலக உதவியாளர்கள் என 65 பேர் கலந்துகொண்டிருந்தனர் .
மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுக்கு சபை செயலாளர் திரு பே .கோகுலராஜ் அவர்களின் தலைமையில் கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது நடைபெற்றது . அதனைத்தொடர்ந்து எமது அலுவலக நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்து வவுணதீவு பொது சந்தை , பொலிஸ் நிலையம் ஊடாக மண்முனை மேற்கு பிரதேச செயலகம் வரை சென்று பிரதான வீதியின் அருகே காணப்படட திண்மக்கழிவுகள் , பொலித்தீன், கண்ணாடி கழிவுகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரித்து தொடர் நடவடிக்கைகளுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளன .