மண்முனை மேற்கு பிரதேச எல்லைக்குள் மரணிப்போரின் உடல்களை கள்ளியங்காடு தகனசாலையில் எரிப்பதற்கான சந்தர்ப்பம்
மண்முனை மேற்கு பிரதேச எல்லைக்குள் மரணிப்போரின் உடல்களை கள்ளியங்காடு தகனசாலையில் எரிப்பதற்கான சந்தர்ப்பம்
மேற்படி விடயமாக மண்முனை மேற்கு பிரதேச சபையின் சார்பாக மட்டக்களப்பு மாநகர சபையினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக எமது மண்முனை மேற்கு பிரதேச எல்லைக்குள் மரணிப்போரின் உடல்களை கள்ளியங்காடு தகனசாலையில் எரிப்பதற்கு மட்டக்களப்பு மாநகர சபையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று இரு தரப்பினர்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இனிவரும்காலங்களில் மண்முனை மேற்கு பிரதேச எல்லைக்குள் மரணிப்போரின் உடல்களை கள்ளியங்காடு தகனசாலையில் தகனம் செய்ய முடியும் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம்
குறிப்பு :- குறிப்பிட’ட தகன சாலையில் தகனம் செய்யும் உடல்களுக்கான தகன கட’டணம் மட்டக்களப்பு மாநகர சபையினரால் அறவிடப்படும் கட’டணத்தினை ஒத்ததாக அமையும்.