அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஆயித்தியமலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் நெல்லிக்காடு கிராமத்தில் உடைவுற்று மக்கள் போக்குவரத்து செய்ய சிரமத்தினை எதிர்நோக்கிய காளிகோவில் வீதியானது இன்றைய தினம் சபை செயலாளர் திரு பே .கோகுல்ராஜா அவர்களின் தலைமயில் தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு அ .விக்கினராஜா அவர்களின் மேற்பார்வையின் கீழ் சபைக்குரிய வாகன மற்றும் ஆளணி வசதிகளை கொண்டு திருத்தம் செய்து மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட்து