November 14, 2023

2024ம் ஆண்டிற்கான பொருட்கள், சேவை வழங்குனர்கள், ஒப்பந்தக்காரர்களை பதிவு செய்தல்

அறிவித்தல்
மண்முனை மேற்கு பிரதேச சபை, வவுணதீவு

2024ம் ஆண்டிற்கான பொருட்கள், சேவை வழங்குனர்கள், ஒப்பந்தக்காரர்களை பதிவு செய்தல்

எமது மண்முனை மேற்கு பிரதேச சபையினால் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரிய கீழ் குறிப்பிடப்படுகின்ற பொருட்கள் சேவைகளை வழங்குவதற்கு பதிவு செய்ய விரும்பும் தரம் வாய்ந்த வழங்குனர்கள், உற்பத்தியாளர்கள், ஒப்பந்தகாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஒவ்வொரு சேவை வழங்குனர்களும் வியாபாரம் பதிவு செய்யப்பட்ட தன்மை அல்லது அத்துடன் தொடர்புபட்ட பொருட்கள் சேவைகளுக்கே வழங்குனர்கள் பதிவு செய்து கொள்ள முடியும்.
பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ரூபா 2,000,000 (இரண்டு மில்லியன்) க்கு மிஞ்சாத ஒப்பந்தங்களை பொது நிதி சுற்று நிருப இல 01/2012ற்கு அமைவாக பெற்றுக் கொள்ள முடியும்.
வாகன சுத்திகரிப்பு பராமரிப்புக்காக பதிவு செய்யும் வழங்குனர்கள் தேவையான அடிப்படை உபகரணங்கள் மற்றும் வசதிகளை உறுதிப்படுத்தும் விபரங்களை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
கேள்விப் பத்திரங்கள் (ஒப்பந்தங்கள்) கூறுவிலைகள் என்பன பொதுவாக பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்ட வழங்குனரிடமிருந்து சேவைகளைக் கோர உரிமையுண்டு. வழங்கப்படும் பொருட்கள்இ சேவைகள் தரமானதாக இருத்தல் வேண்டும்.
உடன்படிக்கைக்கு அமைவாக பொருட்கள் சேவைகளை வழங்கத் தவறிய நிறுவனங்கள் வழங்குனர்களுக்கான பட்டியலிலிருந்து நீக்கப்படுவர்.
வழங்குனர்களுக்கு முற்பணங்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது. சகல வழங்குனர்களுக்கும் கொடுப்பனவுகள் மேற் கொள்ளப்படும் போது தங்களது பதிவுச் சான்றிதழ்களிலுள்ள நிறுவனத்தின் பெயருக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களை 01.11.2023 தொடக்கம் 22.12.2023 வரையான வார நாட்களில் மு.ப 9.00மணி தொடக்கம் பி.ப 2.30 மணி வரை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் 2023 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ள வழங்குனர்களுக்கான விண்ணப்பங்கள் தபாலில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் தபாலில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத வழங்குனர்கள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவு செய்து கொள்ள விரும்பும் அனைத்து விண்ணப்பதாரிகளும் ரூபா 1000.00 கட்டணத்தை அலுவலகத்தில் காசாளரிடம் செலுத்தி / பிரதேச சபையின் இலங்கை வங்கிக் கணக்கில் (கணக்கு இல. 2699077) வைப்புச் செய்து பற்றுச் சீட்டின் மூலப் பிரதியை பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து 27.12.2023 ஆம் திகதிக்கு முன்னர் “செயலாளர் பிரதேச சபை மண்முனை மேற்கு வவுணதீவு” எனும் முகவரிக்கு பதிவுத் தபாலிலோ / நேரடியாகவோ அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
முடிவுத் திகதிக்குப் பின்பு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்பும் போது தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் “2024ம் ஆண்டிற்கான வழங்குனர்களைப் பதிவு செய்தல்” என குறிப்பிடல் வேண்டும்.
மேலதிக விளக்கங்களுக்கு mwpsvavunativu@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது “பிரதேச சபை மண்முனை மேற்கு வவுணதீவு” அலுவலகத்துடன் தொலைபேசி இலக்கம் 065-2056992 மூலம் தொடர்பு கொள்வதுடன் விண்ணப்பப் படிவத்தினை எமது manmunaiwest.ps.gov.lk  எனும் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

செயலாளர்,
மண்முனை மேற்கு பிரதேச சபை,
வவுணதீவு.

 

Supplier Registration – 2024 Application

Loading

Top
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel